Periyava Charanam

“கவலைகள் கல்லு மாதிரி, பகவான் தெப்பம் மாதிரி”
——————————————————————–
ஒரு முறை பெரிவாளிடம் ஒரு அம்மா சொன்னார். நான் நெறைய ஸ்லோகம் பாராயணம் பண்றேன். மத்யானம் சாப்பிடவே ஒரு மணியாறது. ஆனா பிரச்சினைகள் தீரலே.பகவான் கண் பார்க்கலேன்னு வருத்தப்பட்டார்.
ஸ்லோகம் சொல்றச்சே சுவாமி முன்னாடி உட்கார்ந் துண்டு, சுவாமியை மனசிலேநிறுத்திண்டு தானே பாராயணம் பண்றேள்.
அதெப்படி முடியும்.. குளிச்சிண்டே, வேற வேலை பார்த்துண்டே தான் சொல்றேன்.எல்லாம் மனப் பாடம். தப்பு வராதுன்னா அந்த அம்மா.
காய் நறுக்கணும்னா அரிவாள்மணை, கத்தியைக்கிட்டே வைச்சுக்கறோம். சமைக்கணும்னா அடுப்பு கிட்டே போகணும். குளிக்கணும், துவைக்கணும்னா தண்ணீர் பக்கத்திலே போறோம். ஸ்கூட்டர், கார்எதுவானாலும் கிட்ட இருந்து ஓட்டினா தான் ஓடறது.
ஆனா ஸ்லோகம் சொல்லணும்னா மனசு சுவாமிகிட்டே போக வேண்டாமா? ஸர்வாந்தர்யாமி தான் அவன். ஆனாலும் பிரச்சினை பெரிசுன்னா பக்கத்துல உட்கார்ந்து அனுசரணையா சிரத்தையா சொல்லுங்கோ. நிச்சயம் கேட்பான்.
வேறு வேலையில் கவனம் இல்லாமிலிருந்தால் விபத்து நடக்கும். ஆனா பகவான் ஞாபகம் இல்லாம ஸ்லோக மந்திரத்தை முணு முணுத்தா போறும்னு நெனைக்கலாமா?
புதுப் பூவைப் பார்த்தா பகவானுக்குத் தரணும்னு ஆசை வரணும். தளதளன்னு இருக்கிற சந்தனத்தை பகவானுக்கு பூசிப் பார்க்கணும்னு நெனைப்பு வரணும். இந்தப் புடவையிலே அம்பாள் எப்படி இருப்பாள்னு நெனைச்சு தியானம் பண்ணினாலே கருணை செய்கிறவள் ஆச்சே.
கல்லைத் தூக்கி சமுத்திரத்திலே போட்டா மூழ்கிடும். ஆனா மரத்தாலே கப்பல் பண்ணி, அதிலே எத்தனை கல் ஏத்தினாலும் மூழ்கிறதில்லே.
கவலைகள் கல்லு மாதிரி, பகவான் தெப்பம் மாதிரி, மனசு என்கிற சமுத்திரத்திலே பகவானைத் தெப்பம் ஆக்கணும். தெய்வத்தை இணைக்கிற ஆணிகள் தான் பூஜை மந்திரங்கள் எல்லாம். அப்புறம் கவலைகளைத் தூக்கி தெப்பத்தில் இறக்கலாம். சம்சாரசாகரத்தில்
மூழ்கடிக்கப்படாமல் கரை சேர்ந்து விடலாம்.
Courtesy: CHAMARTHI SRINIVAS SHARMA

Thought

Our family is a follower of Kanchi mutt for generations and I feel very blessed to have had the dharshan of Mahaperiya for probably 2 or 3 times…but unfortunately I never made attempt to get much closer, other than following our culture in a casual way. In spite of it and probably I am now learning more on his karunyam, particularly through some very great WhatsApp groups, today (a Thursday) I had a dream…In that Mahaperyava suddenly tells me that we must go to some place immediately and starts walking…I don’t know where we are or where we are going…after walking just a few meters further we climb a small raised land and after it suddenly becomes a dark and thick forest with all sorts of wild and dangerous animals…I am really afraid as I could see lions etc and a pack of hyenas are just at my heals, menacingly showing their teeth…I look around at Periyava and see that he is peacefully walking unperturbed but I could also see that he is doing some japam while walking, with his eyes closed …..so I felt assured and decided that I should also recite something I have learnt and keep walking…the dream ended at that point.

But what I surmise from the dream is that life is a journey with many ups and downs, through towns, villages and forests surrounded by various situations and challenges, but when we have our faith in our Guru and continue to follow our path, with his guidance and with what we have learnt, our journey would eventually lead us to our destination in spite of obstacles.

This also reminds me what I read in “Sai Satcharitha” about Guru and the advantages of crossing our samsara sagaram with at most faith in him.

I want to complete this post sharing a message on Mind Control received in WhatsApp.

ரமண மகரிஷி கூறுகிறார் !

உன் சிந்தனைகளை நிறுத்தி விடு ..பிறகு உன் மனம் எங்கிருக்கிறது என்று சொல் ..

சிந்தனைகள் இல்லாத இடத்தில் மனம் இருப்பதில்லை ..மனதை பார்த்தபடி இருங்கள்

அதை தொடர்ந்து விடாமல் பார்த்தபடி இருங்கள் ..மனதில் ஓடும் எண்ணங்களை பார்த்தபடி இருங்கள் ..

உங்களை அவற்றுடன் அடையாளப் படுத்திக் கொள்ளாதீர்கள் ..விழிப்புடன் அவற்றை கவனித்தபடி இருங்கள் ..

நீங்கள் தொடர்ந்து கவனிப்பதால் எண்ணங்கள் மறைந்து விடும் ..உடன் உங்கள் மனமும் மறைந்து விடும் ..

மனம் மறையும்போது அங்கு ஏற்படும் வெற்றிடத்தில் ..உண்மை மறைந்து இருக்கிறது

ஓஷோ

Madras Heritage and Carnatic Music

Articles on Chennai, its heritage, history and culture

Tamil and Vedas

A blog exploring themes in Tamil and vedic literature

Sage of Kanchi

Virtual Mahaperiyava Temple