ஸ்ரீ குரு சரித்திரம்

ஒம் ஸ்ரீ குருப்யோ நம: ஹரி: ஓம்

Poojaya Sri. Achaarya Bharadwaja

Achaarya E.Bharadwaja was born on 30th October 1938 and was a post-graduate in English literature. After a decade of intellectual quest for Truth, he was converted by a profound spiritual experience at the Samadhi Mandir of Sri Saibaba of Shirdi. Thereby he left Indian Administrative Service(IAS), which is a highly respected position in the society and took a position as Lecturer of English literature for the ease of spreading his master’s teachings. Thereafter he devoted himself to a lifetime of intensive research into the lives and teachings of several saints, travelling extensively and personally contacting many of them. Like many other great men he also insisted on the necessity of a Sadguru to direct one smoothly in the spiritual path. The culmination of all this is a series of books on Sri Sai Baba of Shirdi and many more great saints. He says, Sai Baba of Shirdi is the matchless saint, is a blend of all religions and is the answer to all the questions of present day and spirituality. Other books that explain and prove existence of God in a scientific manner and the necessity of resorting to a Sadguru are also invaluable. His writings are getting translated into several other languages of the world.

He made those who contacted him to start spiritual disciplines easily and live a richer, purposeful,righteous and peaceful life. Towards this end in view he founded the Shirdi Sai Cultural Mission at Vidyanagar and Sai Baba Mission in Ongole, Andhra Pradesh. He also founded a Telugu fortnightly(now monthly), SaiBaba, which continues to spread his messages, and was the main source of inspiration in the construction of several Sai Baba temples. After a life of incessant activity spreading the teachings of Sri Sai Baba of Shirdi, he attained Maha Samadhi on 12th April 1989. Though he has left his mortal frame, even now He responds to the call of his devotees. Presently, his work is being carried by the Sri Master Universal Sai Trust & Acharya Bharadwaja Peace Foundation, Ongole, Andhra Pradesh.

More on Sri Achaarya’s work and other details visit http://www.saibharadwaja.org/

You can also read the original English version of “Sri Guru Charithra” book written by Sri Achaarya, online from the above site.

ஒம் ஸ்ரீ குருப்யோ நம: ஹரி: ஓம்

ஸ்ரீ குரு சரித்திரம்

பூஜ்ய ஸ்ரீ ஆச்சார்யா பரத்வாஜர் ஆங்கிலத்தில் எழுதியதின் தமிழாக்கம்.

ஆச்சார்யரின் முன்னுரை

ஸ்ரீ தத்தாத்ரேயர் வழிமுறை பற்றி நான் அறிந்தது ஒரு தெய்வாதீன தற்செயல்.நான் சீரடி சாயி பாபாவைப் பற்றி தகவல் திறட்டும்போது திரு.குசா பாவ் என்றவரின் அனுபவங்களை அறிய நேர்ந்தது.

திரு.குசா பாவ், தனது குரு ஸ்ரீ தத்த மஹராஜ் என்பவரிடம் மந்திர வித்தை முடலியவறி கற்றறிந்தார். ஆவரால் பொருட்களை மாயமாக்கவும், திடீரென வெறும் கையசைவில் மந்திர சக்தியால் இனிப்பு வரவழித்து பக்தரகளை பரவசப்படுத்துவார். ஆனால் அவருக்கு பில்லி சூனியம் போன்ற தவறான சக்திகளைக் கற்க வேண்டும் என்ற ஆசை அதிகரித்து தன் குருவை தொந்தரவு செய்யத் தொடங்கினார். செய்வதறியாத குருவோ இனி அவ்விருவரும் ஒன்றாயிருப்பது தவறேன்று உணர்ந்து, அவரை ஶ்ரீ சாய் பாபாவிடம் அனுப்பிப் பின் குரு எங்கோ இமயமலையில் தவம் செய்யச் சென்றார்.

குசா பாவ் பாபாவைக் காண வந்த போது பாபா கடும் கோவத்தில் இருந்தார். குசா பாவிடம் மந்திரத்தில் இனிப்பு வரவழிப்பது போன்றவை ஏமாற்றுதலாகும் என்றும் யாருடதையோ எங்கே இருந்தோ அவற்றை அவர் திருடுகிறார் என்று வைதார். இவ்வாறு செய்வதால் அவர் தன் சிஷ்யர்களை தவறான மந்திர தந்திர பாதைக்கு இழுத்துச் செல்கிறார் என்று கடிந்தார். உள்ளே வரவேண்டும் என்றால் அத்தகய மந்திரங்களை விடவேண்டும் என்ற கண்டித்துச் சொல்லிவிட்டார். வேறு வழி தெரியாமல் குசா பாவும் அருகில் இருந்த குளத்தில் மூழ்கி எழுந்தார். உடனே அவருக்கு அத்தனை மந்திரங்களும் மறந்தும் பயனற்றும் போனது. பிறகு பாபா அவரை மசூதிக்குள் அனுமதித்து பின் அவரை 108 முறை குரு சரித்திரம் படிக்கும் படியும் பின்னர் அ வரை அடிக்கடி கங்காபூர் சென்று வரும்படியும் செய்தார். பின்னர் பாபா அவரை மன்னித்து தன்னை நினைத்தபோது வீபூதி வரவழிக்கும் சக்தியையும் கொடுத்தார்.
இந்நிகழ்ச்சி ஒரு நல்ல குருவை அடைய குரு சரித்திரம் சிறந்ததோர் உபாயம் என்று என்னை உணரச்செய்தது. மேலும் சீரடியில் இதைத்தான் பல பக்தர்கள் மராட்டியில் படிக்கிறார்கள் என்றும் அறிந்தேன். ஆனால் எனக்கு மராட்டி தெரியாததாலும் அந்த பக்தர்களுக்கு வேறெந்த பாஷையும் தெரியாததால் இதைப்பற்றி நான் மேற்கொண்டு அறிய முடியாமலிருந்தது.
இதற்கிடையில் நான் சாய் பாபாவைப்பற்றி தகவல் சேகரிக்கும் போது அவருக்கும் ஶ்ரீ அக்கால்கோட் மஹாராஜ் என்ற மற்றுமோர் சத்குருக்வுக்குமிடயே இருந்த பல ஒற்றுமைகளை அறிய முடிந்தது. அ ந்த மஹானைப்பற்றி ஆராயும் போது அவர் அதற்கு முன்னால் இருந்த தத்தாத்ரேயரின் இரண்டாவது மறு அவதாரமென்று கருதப்படும் ஶ்ரீ நரசிம்ம சரஸ்வதியின் மறு அவதாரமென்பதயும் உணர்ந்தேன்.
ஒரு முறை நான் உத்தரப்ரதேஷத்தில் உள்ள நரசிம்மரன்யா என்னும் ஊரில் நடந்த பாகவத சப்தாகத்தின் பொழுது ஶ்ரீ மாதா ஆனந்தமயியை சந்தித்தேன். அங்கு தினமும் நடக்கும் உபன்யாசத்தின் போது ஒரு நாள் பௌரானிகர் ஆத்ம ஞானம் அடைய உயிருடன் இருக்கும் ஒரு குருவையே நாட வேண்டும் என்றும் தன்னுடலை விட்டு நீங்கிய ஓர் குரு எவ்வளவு மஹா புருஷராயிருப்பினும் நமக்கு லோகாயதமான வரங்களையே தர முடியும் என்று கூறினார். அவர் எனக்கு அவ்வளவாகத் தெரியாத இந்தி மொழியில் பேசியதால் என்னால் மேற்கொண்டு அவரிடம் விளக்கம் பெற முடியவில்லை.ஶ்ரீசாய்பாபா உயிருடன் இல்லாததால் நான் என்ன செய்வது என்று குழம்பினேன்.

சில மாதங்களுக்குப் பிறகு இவ்விஷயத்தில் பாபாவின் வழிகாட்டுதலை வேண்டி சீரடியில் ஏழு நாட்கள் தங்க உத்தேசித்துச் சென்றேன். அங்கு இரண்டாம் நாள் வழக்கத்துக்கு மாறாக பூனாவிலுள்ள என்னுடய முன்னாள் மாணவன் ஒருவரை சந்திக்க வேண்டுமென்று ஒரு உந்துதல் எழுந்தது. சதாரணமாக நான் அவ்வாறு யாரையும் சென்று பார்க்கும் பழக்கமில்லாதவன். இருப்பினும் நான் பூனா சென்றபோது என் மாணவர் வேலையிலிருந்து திரும்பாததால் நேரத்தை செலவிடகடைத்தெருப்பக்கம் சென்றேன். எதேச்சயாக அங்கு ஓர் பூ வியாபாரியிடம் அருகில் ஏதேனுமோர் மஹான் இருக்ன்றுகிறாரா கேட்டபொழுது அவர் என்னை ஶ்ரீ வாசுதேவானந்த சரஸ்வதியின் நேர் சிஷ்யரான ஶ்ரீ குல்வானி மஹராஜ் என்ற மஹான் இருக்குமிடத்திற்கு வழிகாட்டினார்.

அதன்படி அந்த மடத்தினுள் நுழையும்போபோ அந்த வயது முதிர்ந்த சன்யாசி “.இதோ பாபாவின் குழந்தை வருகிறதே” என்று என்னை வரவேற்றார். உடனே எனக்கு என் குழப்பங்களுக்கு விடை கிடைக்கப் போவது தெரிந்துவிட்டது. என்னுடைய கேள்வியை கேட்டவுடன் அவர் பௌராணிகர் கூறியது தவம் முதலியவற்றால் ஆத்ம ஞானம் அடைந்தவர்களுக்கே பொருந்தும் என்றும் சாய் பாபா சாக்க்ஷாத் தத்தாத்ரேயரின் மறு அவதாரமென்பதால் அது பொருந்தாதென்றும் விளக்கினார்.பாபா இன்றும் தகுதி வாய்ந்த பக்தர்களுக்காக மனித உருவில் வந்து அருள் பாலிக்கிறார் என்றும் நான் தற்போது செல்லும் பாதை மிகச் சரியானது அதிலேயே தொடருமாறு ஆசிகூறினார். பின்னர் அங்கிருந்து கிளம்ப அனுமதி பெறும் போது அம்மஹானிடம் என்னுடைய தேடுதலுக்கு உதவ ஏதேனும் புத்தகம் தருமாறு வேண்டினேன். உடனே அவர் சொல்படி அவரது சிஷ்யரொருவர் “ஶ்ரீ குரு சரித்ரத்தின்” ஓர் சம்ஸ்க்ருதப் படைப்பை கொண்டு வந்து “நீங்கள் மிகவும் அதிர்ஷ்டமானவர். இந்த அரிய புத்தகத்தின் வெகு சிலப் ப்ரதிகளே இங்குள்ளது” எனக்கூறிக்கொடுத்தார். அப் புத்தகம்   ஶ்ரீதத்தாத்ரேயரின் புகழை சம்ஸ்க்ருத செய்யுள் வடிவில் படைக்கப்பெற்றது.  உடனே ஶ்ரீசாய்பாபா எனக்கு மூன்று வித அருளைத் தந்தாரென்றுணர்ந்தேன். என் குழப்பத்தின் தீர்வு;  வெகுநாட்களாக என் தாபமான நான் படிக்க்கூடிய மொழியில் “ஶ்ரீ குரு சரித்ரத்தின்” ஓர் சம்ஸ்க்ருதப் படைப்பை எனக்கு கொடுத்தது; மூன்றாவதாக தத்தாத்ரேயர் வழியில் வந்த ஒரு பெரிய முனிவரின் தரிசனமும் ஆசிகளும் எனக்கு கிட்டியது. பின்னாள் ஶ்ரீவாசுதேவானந்த சரஸ்வதி தினமும் ஶ்ரீகுரு சரித்ரத்தை தினமும் படிப்பாரென்றும் அவருக்கு ஶ்ரீதத்தாத்ரேயர் காட்சி தந்து மந்த்ரோபதேசம் செய்தாரென்றறிந்து நான் மிகவும் நெக்குறுகினேன்.இப்பொழுது நான் செய்வது ஓர் சரளமான மொழியாக்கம். மேலும் பலர் ஶ்ரீகுருசரிதம் படித்ததனால் ஶ்ரீஅக்கால்கோட் மஹாராஜரின் சிஷ்யர்களானர் என்றறிந்து இந்தப் புத்தகத்ன் மேன்மை குறித்துப் பேருவகைக் கொண்டேன்.

நூலுறை

ஶ்ரீ குரு சரித்ரத்தை முதல் முதலாக திரு. கங்காதர ஸரஸ்வதி மராட்டிய மொழியில் இயற்றினார். புகழ் பெற்ற மராட்டிய பண்டிட் ஶ்ரீ ல.ர.பங்கார்கர் ( மராட்டிய இலக்கிய வரலாறு .பாகம் II பக்கம் 116) ஶ்ரீ குரு சரித்ரத்தில் விவரிக்கப்பட்டுள்ள லீலைகளை நிகழ்த்திய ஶ்ரீ ஶ்ரீ தத்தாத்ரேயரின் நேர் அவதாரங்களான ஶ்ரீ ஶ்ரீபாத ஶ்ரீவல்லபர் 14ம் நூற்றாண்டிலும், ஶ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி 15ம் நூற்றாண்டிலும் மகோன்னதப் புகழ்பெற்று விளங்கினர். குரு சரித்திரத்தின் மராத்திய மூலம் 7,000 செய்யுள்களுடன் 53 அத்தியாயங்களில் செய்யப்பட்டிருந்தது. பின்னர் 19ம் நூற்றாண்டில் ஶ்ரீதத்தாத்ரேயர் வழி வந்த ஒரு புகழ்பெற்ற முனிவரான ஶ்ரீ வாசுதேவானந்தா ஸரஸ்வதி அந்த மராத்திய மூலத்தை அதே போல ஸம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்தார். பின்னர் அவருக்கு காட்சிதந்த ஶ்ரீதத்தாத்ரேயர், அந்த நூல் மிகவும் இந்து தர்ம செயல்முறைகளைப் பற்றி அதிகமாக விளக்கி அந்த நூலின் ஆதி காரணத்தையும், பயனையும் குறைப்பதால், அத்தகைய பகுதிகளைச் சற்றே மட்டுப்படுத்துமாறு அருள் புரிந்தார். அத்தகையப் பகுதிகளக் விரிவினை மட்டுபடுத்தி, அந்த ஸம்ஸ்கிருத நூலை 2000 செய்யுள்களுக்கு குறைக்குமாறு ஆணையிட்டார். அவ்வாறு செய்யப்பட்ட நூலை (ஆச்சார்யா ஶ்ரீ பரத்வாஜ் அவர்கள்) ஒரு சிறந்த ஸம்ஸ்க்ருத பண்டிதரின் துணை கொண்டும், மொழிபெயர்ப்பின் முன்பும் பின்பும், பல ஞானிகளின் அருள்கூர்ந்த ஆசியினாலுமே மொழிபெயர்க முடிந்தது (எனக் கூறுகிறார்). மேலும் அவர் ஶ்ரீதத்தாத்ரேயரின் மேலே குறிப்பிட்ட இரு அவதாரங்களின் சரித்திர குறிப்புகளைத் தொடர்ந்து தேடி அவற்றை இந்த மொழிமாற்ற நூலின் பிந்தைய பதிப்புகளில் முழுமையாகக் கொடுக்க முடியும் என நம்பிக்கைத் தெரிவிக்கிறார்.

இந்த மொழியாக்கப் பதிப்பின் குறிக்கோள்

ஐந்து காரணங்களுக்காக இந்த ஆங்கில(*) மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. முதலாவதாக இந்நூலைப் படிப்பது அவரவர் மதம் மற்றும் மனோநிலைக்கேற்ப தத்தம் ஆழ்நிலை வேதாந்த எண்ணங்களை தொடர்பு கொள்ள ஒரு சரியானதோர் சாதனமாகும். நம் ஸநாதன தர்மத்தின்படி அண்ட சராசரங்களும், அதில் கண்டு, உணர்ந்து, அனுபவிப்பதெல்லாம் ஒரே பரம்பொருளின் உருவகமேயாகும். அந்த பரம்பொருளான ஶ்ரீதத்தாத்ரேய தத்துவமே அவ்வப்போது பலப்பல ஸத்குருவாய் அவதரிக்கின்றது.ஆகவே நாம் அத்தகைய அவதாரங்களின் வாழ்க்கை, செயல்கள் மற்றும் உபதேசங்களைப் படிக்கும்போது நாமும் அந்த தத்தாத்ரேய பரம்பொருளோடு மனமொன்றி லயிக்கத் தொடங்குகிறோம். இரண்டாவதாக ஶ்ரீ நரஸிம்ம ஸரஸ்வதி அவதாரத்தில், ஶ்ரீதத்தாத்ரேயர் பக்தர்கள் அன்புக் குரலெழுப்பும் போதெல்லாம் தான் அவதரிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.இப்பொழுது இருக்கும் கலாச்சார கேடுகளும் பண்பாட்டு குறைபாடுகளும் நிறம்பிய இந்த நாகரீக நாட்களில் தத்தாத்ரேயரின் அம்சமான ஸத்குருக்கள் தோன்றுவது மனித குலத்திற்கே ஒரு நல்வழி காட்டி உயர்ந்த வாழ்க்கைக்கு அடிகோலும் இன்றியமையாத நற்பேறாகும். மூன்றாவதாக, அன்மையில் தோன்றிய ஸத்குருவும் பரமாத்மாவின் முழுஅவதாரமாகிய ஶ்ரீசீரடி சாய்பாபா மூலம் ஶ்ரீதத்தாத்ரேயர் என்னும் ஒரே பரம்பொருள் பல பரமார்த்த ஸத்குரு ரூபமாய் பல மதங்களிலும் நாடுகளிலும் அவதரிக்கின்றது என்பதை தெள்ளத்தெளிவாக காட்டியுள்ளது. இவ்வாறு குருசரித்திரத்தை பரவலாக பலரும் படிக்க முடிந்தால் நம்மிடையே உள்ள நற்குணம் நிறைந்த பல ஸத்யவான்கள் நமக்கென்று அவதரித்துள்ள பல ஸத்குருக்களின் அருளைப்பெற ஏதுவாகும். நான்காவதாக குருசரித்திரத்தை நன்கு உளமாற அனைவரும் படிப்பது,  இப்போது உள்ள மதம் ஜாதி ஆகிய குறுகிய தவறான கண்ணோட்டத்திலிருந்து விலகி பெருவாரியான மக்கள் நம் வேத ரிஷிகளிடம் “நம்மையுணர்த்தி நற்கதி தரக்கூடிய எண்ணங்கள் எல்லா திசைகளிலிருந்தும் வர” ப்ரார்த்தனை செய்யவதை கற்க ஏதுவாகும். ஐந்தாவதாக இந்த குருசரித்திரத்தை படிக்கும் பக்தர்கள் ஒரு உண்மையான ஸத்குரு யார் அவரின் அடையாளங்கள் என்ன என்பதைப் புரிந்து மற்ற அரை வேக்காட்டு சுயநல போலி ஆட்களின் ஜால வித்தைக்களுக்கு ஏமாறாமல் இருக்க இயலும். (*இந்த  தமிழ் மொழியாக்கம் காரணமும்).

குரு சரித்திரத்தின் வேதாந்த மற்றும் மனோ தத்துவ பிண்ணனி
தத்தாத்ரேயரின் மஹோண்னத அவதார மஹிமைகளைக் கூறும் பிண்ணனியில், குரு சரித்திரம் நமது இந்தியாவின் பண்டைய காலமுதல் உள்ள வாழ்க்கைத் தத்துவத்தை முழுமையாக விவரிக்கும் ஒர் வரைபடமாக விளங்குகிறது. அது நமது மானிட பிறப்பை ஒர் என்றும் மாறாத சாந்தி, ஆனந்தம் மற்றும் நிறைவுடைமைக்கான தேடுதல் மேலும் அதிலுள்ள அபரிமிதமான ஆத்ம ஞான சக்தியை முழுமையாக வெளிக் கொணரும் ஓர் அசாதாரண முயற்சி என விவரிக்கின்றது.  மனிதனின் அத்தனை முயற்சிகளும் இதன் வெளிப்பாடேயாகும். ஆனால் சரியான புரிதல் இல்லாமையால்  பலர் இந்த குறிக்கோள்களையும், இப்பிறப்பின் உண்மைத்தன்மையும், அனைத்தும் ஒரே பரப்ரம்மத்தின் வெளிப்பாடே என்பதையும் உணர்வதில்லை. நாம் காணும் அனைத்தும் இந்த ப்ரபஞ்சமும் பரப்ரம்மத்தின் மாய வெளிப்படுதலே என்பதைப் புரிந்து கொண்டு அதன்படி தன் முக்குண உணர்தல், வாக்கு மற்றும் செயல்களை முறைப்படுத்தினால்தான் இந்த நிலை மற்றும் குறிக்கோளை அடையலாமென நம்பலாம்.  இவ்வுண்மையை உணர்ந்த ஞானிகள், அதையறியாத ஏனய மனிதர்கள் மீது கொண்ட அபரிமிதமான கருணையால் அம்மக்களின் துயர் தீர்க்க அவர்களின் அனைத்து உணர்வுகளை ஒருங்கினைத்து இந்த உண்மைநிலையை நோக்கி திருப்பி  விட வழிவகுத்தது தருகிறார்கள். ஆதலால் ஒரு சரியான வாழ்க்கை முறை என்பது இந்த குறிக்கோளை நோக்கி,  அவரவர் நிலை, காலம் மற்றும் புரிதலுக்கேற்ப வகுக்கப்பட்ட தொடர்ச்சியானதோர்  நெறிமுறை அல்லது வேள்வியாகும்.( பிறப்பிலிருந்து கடைசிவரை செய்வது அனைத்தும் வேறு வேறு செயல்கள் போல தோன்றினாலும் அவையனைத்தும் தொடர்ச்சியான ஒரே செயல் என்பது இதன் பொருள்)  இது ஒவ்வொரு வினாடியும் ஞானமார்கத்திலேயே திளைக்கும் மஹான்கள் நேரடியாக உணர்ந்த  அனுபவக் கருத்து.  பண்டைய ஞானத்தின்படி இந்த ப்ரபஞ்சமே ஒரு பெயர் வடிவம் ஏதுமில்லாத ஒரு மஹா சக்தியின் முதற் படைப்பாகும். இந்த சக்தி செயல்பாடு, நிஸ்ச்சலனம் ஆகிய இரு நிலைகளைக் மாறி மாறி எடுக்கும் தன்மை கொண்டது. இந்த மஹாசக்தியை “பரப்ரம்மம்” என்பர்.  அச்சக்தியின் செயல்படும் தன்மையை “ப்ரக்ருத்தி” என்பர். நாம் காணும் இந்த அண்ட சராசரம், வான், கோளங்கள் முதல் அணுவைவிடச் சிறியதானதொன்று வரை எல்லாம் ப்ரக்ருர்தியும் அதன் விளையாடல்களேயாகும். ஒவ்வொரு சுழற்சியின் இறுதியிலும் இச்சக்தி தன் மாயப் படைப்புகளை முடிவுக்கு கொண்டு வரும். இவ்வாறு மாறி மாறி நடக்கும் படைத்தல் -அழித்தலை நாம் நம் புரிதலுக்காக ப்ரம்மாவின் விழித்தல் மற்றும் உறக்க நிலைகள் எனக் கூறலாம். இத்தகைய சுழற்சிகள் உள்ளே தனித்தனி பெயர் கொண்ட “கல்பங்கள்” எனும் பல காலச் சக்கரங்களை உடையது.  உதாரணமாக இப்போது நடப்பது “ஸ்வேத வராக கல்பம்” (அல்லது தமிழில் மாற்றினால் வெள்ளைப் பன்றி கல்பம்).  ஒவ்வொரு கல்பமும்  பல “மன்வந்தரங்களாக”  பிரிக்கப்பட்டுள்ளது. அதில் அதற்கு வேண்டிய  அனைத்து முறைகள், சட்ட திட்டங்களை  நிர்ணயிப்பது அந்த கல்பத்தின் “மனு”வாகும்.
Madras Heritage and Carnatic Music

Articles on Chennai, its heritage, history and culture

Tamil and Vedas

A blog exploring themes in Tamil and vedic literature

Sage of Kanchi

Virtual Mahaperiyava Temple